Skip to main content

“ஹிட்லரின் நிலைமையைப் போல வந்தால் அது அவமானம்...” - முத்தரசன் 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Communist party Mutharasan speech in vck meeting in chennai

 

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஜனநாயகப் பாதுகாப்பு அறப்போர் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

விசிக கட்சியின் தலைவர் எம்.பி தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிடர் கழகம் கலி. பூங்குன்றன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் பேசுகையில், “நம்மை பெருமைப்படுத்திக்கொள்ள இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை; நாட்டிற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்பு உண்டு. அதன்படி ஒரு கட்சி தோல்வியடைவதும், இன்னொரு கட்சி வெற்றி அடைவதும் ஜனநாயகத்தின் இயல்பு. பாரதிய ஜனதா கட்சி ஒரு காலகட்டத்தில் இரண்டு எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்படி விசிக, கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பிகளைக் கொண்டுள்ளது. வருகின்ற 2024ல் இந்த நிலை மாறும். அப்படி மாற்றுகின்ற சக்தி மக்களுடையது. மக்கள் நிச்சயம் மாற்றுவார்கள். இதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை சீர் குலைக்கத்தான் 2014 முதல் மெல்ல பாஜக அரசு நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது. 

 

தனது காலம் முடிவடைகிற காரணத்தால் பழிவாங்கும் நோக்கம் வேகமடைந்துள்ளது. அதானியையும் அம்பானியையும் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தை செயல்படாமல் செய்கிறார்கள் இந்த மோடியரசு. வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை ஏற்படுத்துவார்கள். ஆனால், இங்கோ தலைகீழாக இருக்கிறது. பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது. இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த, கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் பாணியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார். அப்படி பின்பற்றினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும். ஹிட்லரின் முடிவு பரிதாபகரமான முடிவு மட்டுமல்ல, வெட்ககரமான முடிவு.

 

இறுதியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் இறந்தார். அந்த நிலைமை மோடியே உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பது எங்களின் விருப்பமாகும். 140 கோடி மக்களுக்கு பிரதமராக இருக்கும் நீங்கள் தற்கொலை செய்துகொண்டு மரணித்தால் அது இந்த நாட்டிற்கு ஏற்படும் அவமானமாக இருக்கும். ஆகவே பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Prime Minister Modi's speech on the budget

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார்.

இந்த பட்ஜெட் உரைக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இது புதிய நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் திறன் இந்த பட்ஜெட்டில் இருந்து புதிய அளவுகோல் ஆகும். இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். இந்த பட்ஜெட் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும். 

Prime Minister Modi's speech on the budget

இந்தப் பட்ஜெட்டில், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு முதல் மாத சம்பளத்தை அரசு வழங்கும். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.

இன்று, பாதுகாப்பு ஏற்றுமதி மிக உயர்ந்த அளவில் உள்ளது. பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெறச் செய்ய இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரி குறைப்பு மற்றும் டிடிஎஸ் விதிகள் எளிமைப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் நெடுஞ்சாலைகள், நீர்நிலைகள் மற்றும் மின் திட்டங்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறோம். 

Prime Minister Modi's speech on the budget

நாம் இணைந்து இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம். நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) துறை நடுத்தர வர்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் உரிமை நடுத்தர வர்க்கத்தினரிடம் உள்ளது. இந்தத் துறை ஏழைகளுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வசதியை அதிகரிக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி சூழலை கொண்டு செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் ஸ்டார்ட்அப் மற்றும் விண்வெளி பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்” எனப் பேசினார். 

Next Story

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்; மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET exam malpractice issue; Central minister explanation

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) காலை தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,  “கடந்த 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்ட பிறகு 240க்கும் மேற்பட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்பதை முழுப் பொறுப்புடன் என்னால் சொல்ல முடியும். நீட் தேர்வு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

NEET exam malpractice issue; Central minister explanation

அதே சமயம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசுகையில், “நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது நாடு முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இந்திய தேர்வு முறை மோசடி ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர். நீங்கள் பணக்காரராக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் இந்தியத் தேர்வு முறையை வாங்கலாம்” எனத் தெரிவித்தார்.