ADVERTISEMENT

"ரஜினி முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பேன் என்றாரே... போராடும் மக்களை ஏன் சந்திக்கவில்லை " - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

09:06 AM Feb 17, 2020 | suthakar@nakkh…


சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நாள் முழுவதும் நீடித்த அந்த போராட்டத்தில், திடீரென நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி அந்த கூட்டத்தை கலைத்தனர். இந்த விவகாரம் பிரச்சனை ஏற்படுத்தவே காவல்துறையினர் தற்போது முஸ்லிம் அமைரப்புகளின் நிர்வாகிகளோடு சமாதனம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

28ம் தேதி வரைக்கும் சென்னையில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளார்கள். போராட்டம் தேவையில்லாத ஒன்று என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக உங்களின் கருத்து?

போராட்டம் நடத்தக்கூடாது என்று சொல்லிய பிறகு அந்த போராட்டாங்கள் ஆரம்பிக்க படவில்லை. அதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக இந்த போராட்டங்கள் நடைபெற வேண்டி அவர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் போராட்டம் நடத்த இடம் தரப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் அளித்த உறுதிப்படி காவல்துறையினர் இடத்தை ஒதுக்கவில்லை. தொடர் போராட்டமும் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட போராட்டம்தான். ஒரு நாள் போராட்டத்தை போன்று இதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். தில்லியில் இன்று சாகின் பார்க்கில் நடைபெறுகின்ற போராட்டமும் அதை போன்றதுதான். காவல்துறையினர் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுப்பார்கள். அதில் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள். அவர்களாகவே எப்போது போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள். அரசு அதிகாரிகள் அவர்களை சந்தித்து உறுதி கொடுக்கும்போது அத்தகைய போராட்டங்கள் முடிவுக்கு வரும். வரலாற்றில் பல முறை இத்தகைய போராட்டங்களை நேரில் பார்த்திருக்கிறோம். ஆதலால் இது புதிய வடிவமும் அல்ல, ஜனநாயகத்துக்கு புறம்பான வடிவமும் இல்லை. தொடர் போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறையினர் போராட்டம் நடத்த அனுமதி தருவார்கள் என்று அந்த மக்கள் கடந்த 10 நாட்களாக காத்துக்கிடந்துள்ளார்கள்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்நிலையில், இடைப்பட்ட இந்த நேரத்தில் 28ம் தேதி வரை எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று சென்னை காவல்துறையினர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் உற்றுகின்ற நிகழ்வுதானே. போராட்டம் நடத்த அனுமதி தருவோம் என்று ஒருபக்கம் காவல்துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்து வரும் நிலையில், அதை நம்பி அவர்களும் காத்திருக்கும் சமயத்தில் காவல்துறையினர் இந்த அறிவிப்பை கொடுக்கிறார்கள் என்றால் இது அவர்களின் பாசிசி போக்கை தானே வெளிக்காட்டுகிறது. போராட்டமே நடக்க கூடாது என்று அச்சுறுத்த வேண்டிய தேவை தற்போது என்ன ஏற்பட்டு இருக்கின்றது. ஏதாவது தேர்தல் நேரமா? தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? போராட்டமே நடத்தக்கூடாது என்று சொல்கின்ற அளவுக்கு என்ன அசாதாரண சூழ்நிலை சென்னையில் நிலவுகிறது என்பதை முதலில் கூறுங்கள். எந்த அசம்பாவித சம்பவமும் தமிழகத்தில் இந்த போராட்டதால் நடைபெறாத போது காவல்துறையினர் எதற்காக சென்னையில் போராட்டமே நடக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். எதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். அதனுடைய காரணம் என்ன? இந்த போராட்டத்தையே நடக்கூடாது என்று முன்கூட்டியே திட்டமிட்டு அந்த மக்களை காவல்துறையினர் ஏமாற்றியுள்ளனர். இதனால் ஏமாற்றபட்ட மக்கள் அந்த இடத்தில் கூடி போராடுகிறார்கள். எங்களுக்கு இடமும் ஒதுக்கிக்கொடுக்கவில்லை, போராட்டத்தையும் தடை செய்ய பார்க்கிறீர்கள் என்று கூறி அவர்கள் இடத்தை விட்டு நகராமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது.

என்ஆர்சி இன்னும் தொடங்கப்படவில்லை, சிஏஏ மூலம் முஸ்ஸிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நடிகர் ரஜினிகாந்த் முதல் தமிழக அமைச்சர் வரை பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடிகர் ரஜினிகாந்த் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்கள்? அப்புறம் என்ன இதில் பிரச்சனை இருக்கின்றது?

முஸ்லிம்களுக்கு பாதிப்பென்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களை ஏன் போராடும் இடத்திற்கு சென்று ரஜினிகாந்த் நேரில் சந்திக்கவில்லை. தன்னுடைய ஆதரவை அவர் ஏன் அந்த போராடும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசுகிறார். அந்த மக்களை 10 நாட்களாக காவல்துறையினர் அனுமதி கொடுப்பதாகக்கூறி ஏமாற்றி வந்துள்ளனர். அதை பற்றி அவருக்கு தெரியாதா, என்ன நடவடிக்கை எடுத்தார். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்தானே இவர். அவர்கள் வாக்களித்துதானே இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் போராட்டத்தை காவல்துறையினர் ஒடுக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் யாரேனும் பேசியிருக்கிறார்களா என்றால் அதை பற்றி இவர்கள் வாய் கூட திறக்கமாட்டார்கள் என்பதே நிஜம்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT