ADVERTISEMENT

ஸ்ரீப்ரியாவின் கணவராக நடிக்கணுமா வேணாம்... ரஜினி பற்றி வெளிவராத தகவல்! 

12:19 PM Nov 08, 2019 | Anonymous (not verified)

பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான டி.என்.பாலு ஸ்ரீப்ரியாவை ஹீரோயினாகப் போட்டு, ‘"ஓடி விளையாடு தாத்தா'’என்ற படத்தை ஆரம்பித்தார். அதில் ஸ்ரீப்ரியாவிற்கு கணவராக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு ஓடியபோது, அப்போது வில்லனாக இருந்த ரஜினியை சிபாரிசு செய்து, ரஜினியிடமும் பேசியுள்ளார் ஸ்ரீப்ரியா. அப்போது வளரும் நடிகராக இருந்தபோது, அந்த கேரக்டரை ஏற்க மறுத்துவிட் டார் ரஜினி. அதேபோல் ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படமான "நீயா?'’ படத்திலும் பல கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி.அப்போது நமது நக்கீரனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த "ரஜினி ரசிகன்'’மாத இதழுக்காக, ரஜினியின் ஒவ்வொரு படத்தின் பிரத்யேக ஸ்டில்களை அட்டையிலும் ப்ளோ-அப்பாகவும் வெளியிடுவது வழக்கம். "ரஜினி ரசிகன்' இதழுக்காக ரஜினியும் ஸ்பெஷல் போஸ்கள் கொடுப்பார்.

ADVERTISEMENT



இதனால் ரஜினி ரசிகர்களிடையே ரஜினி ரசிகனுக்கு ஏகோபித்த வரவேற்பு. அந்த வகையில் "பாட்ஷா' ’படத்தின் புது கெட்டப் ஸ்டில்ஸ் எடுக்க விரும்பி, விஜயா வாஹினி ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தோம். படத்தில் ரஜினி எண்ட்ரியாகும் "ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்' பாடல் காட்சி எடுப்பதற்காக செட் போட்டு ஏராளமான ஆட்டோக்களும் வந்திருந்தன. நாம் சென்ற நேரம் லஞ்ச் பிரேக் என்பதால், மேக்- அப் அறையில் சிறிது ஓய்வில் இருந்தார் ரஜினி. நாம் வந்த விஷயத்தை அப்போது ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஜெயராமனிடம் சொன்னோம். அரைமணி நேரம் கழிச்சு சாரிடம் கேட்டுவிட்டு சொல்றேன்'' என்றார் ஜெயராமன்.

ADVERTISEMENT



சொன்னபடியே அரைமணி நேரம் கழித்து ரஜினியிடம் தகவல் சொல்ல, மாடியிலிருந்து இறங்கி வந்த ரஜினி நம்மைப் பார்த்ததும், ""வந்து ரொம்ப நேரமாச்சா, சாப்ட்டீங்களா'' என அன்புடன் விசாரித்ததும், "சார் இந்த கெட்டப்புல (ஆட்டோ டிரைவர்) உங்கள ஸ்டில்ஸ் எடுக்கணும்'' என்றோம்."ஓ.கே. தாராளமா எடுங்க, அதுக்கு முன்னால டைரக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிருங்க. ஷாட் பிரேக்ல எடுத்துக்கலாம்'' என்றார் ரஜினி. நாமும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சென்று, "ஸ்டில்ஸ் எடுக்க ரஜினி சார் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கச் சொன்னார்'' என்றோம். "அட ஏன் சார் நீங்க வேற, இதுக்கெல்லாமா என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். சாருக்கு ஓ.கே.ன்னா நோ பிராப்ளம்'' என்றார். அதன் பின்தான் தென்னை மரத்தடியிலும் ஆட்டோவுக்கு அருகிலும் நின்று விதம்விதமாக போஸ் கொடுத்தார் ரஜினி. இதுதான் ரஜினியின் உயர்ந்த பண்பு, டைரக்டர்களுக்கு தரும் மரியாதை. ‘"வீரா', "மன்னன்', "படையப்பா'’படங்களின் ஷூட்டிங்கின்போதும் இதேபோன்ற அனுபவம் நமக்கு ஏற்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT