Skip to main content

வேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் !

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

"டிவிட்டரை" தினமும் பயன்படுத்துவோர்களில்  நடிகை கஸ்தூரியும் ஒருவர் ஆவர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தினந்தோறும் அரசியல் சார்ந்த செய்திகள் , பொதுநலன் சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை தினமும் பதிவிட்டு வருகிறார். மேலும் இன்று டிவிட்டரில் ஒருவர் நடிகை கஸ்தூரி அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் ? அதில் எந்த கட்சிக்கு ஓட்டு போடணும் என்று கஸ்தூரியிடம் டிவிட்டர் வாயிலாக வினா எழுப்பினார். கேள்வியை எழுப்பியவர்களுக்கு உடனடியாக பதிலளித்த கஸ்தூரி அவர்கள் கட்சியை பார்த்து வாக்களிக்காதீர் என்றும் , நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.

 

actress kasturi twitter



இவரின் கருத்துக்கு பலரும் டிவிட்டர் வாயிலாக பதிலளித்து வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தனது தேர்தல் விதிமுறைகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளை தொலைக்காட்சிகளிலோ அல்லது செய்திதாள்களிலோ விளம்பரங்கள் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ், சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.