ADVERTISEMENT

"இப்படிச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்!" - பாஜக முதல்வரை எச்சரித்த சத்யராஜ் மகள்!

10:05 PM Mar 19, 2021 | prithivirajana

ADVERTISEMENT


உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், மாநில முதல்வரானார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பெண்களின் உடை குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

ADVERTISEMENT

அந்த நிகழ்ச்சியில், "இன்றைய இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் 'கிழிந்த ஜீன்ஸ்' (Ripped Jeans) உடுத்துகின்றனர். இதைப் பெண்கள் சிலரும் பின்பற்றுகின்றனர். இப்படி, பெண்கள் முழங்கால் தெரிய உடை அணிவது, குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும். இதனால், சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் விளைவு குறித்து நான் அச்சப்படுகிறேன்" எனக் கூறினார். இவரின் இந்த கருத்து, இந்திய அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முதலவர் தீரத் சிங் ராவத்தின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது. உடை அணிவது அவரவர் விருப்பம் என்றும், உடையை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்றும் முதல்வரின் பேச்சுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் முதல்வரின் சர்ச்சை பேச்சுக்கு, பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் 'மகிழ்மதி' அமைப்பின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷார்ட்ஸ் மற்றும் கிழிந்த ஜீன்ஸுடன் இருக்கும் படங்களைப் பதிவேற்ற வேண்டாம் எனவும் ஒரு நல்ல பெண் அரசியல்வாதி காட்டன் புடவையில்தான் பொதுவெளியில் தோன்றவேண்டும் எனவும் நிறைய பேர் எனக்கு அறிவுரை கூறினார்கள். திரு. தீரத் சிங்கின் பேச்சை, ஒரு பெரியாரிஸ்டாக நான் கடுமையாக எதிர்க்கிறேன். தனக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. நான் பெருமையுடன் 'சூப்பர் டார்ன் ஜீன்ஸை' அணிந்து இருக்கிறேன். நாங்கள் எதை உடுத்தவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அப்பதிவுடன் ஜீன்ஸ் ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களையும் அப்லோட் செய்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT