ADVERTISEMENT

தேசிய விருதுபெற்ற படத்தில் இணைந்த யோகிபாபு!

12:26 PM Sep 04, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். 'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். 'அந்தகன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லியாக தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.

நாயகியாக ராதிகா ஆப்தே வேடத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் ஏற்கனவே நடிகர் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி, நடிகை பிரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோர் டப்பிங் பேசி முடித்திருந்த நிலையில், தற்போது நடிகர் யோகிபாபு டப்பிங் பேசிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT