yogibabu joins rajinikanth jailer movie

Advertisment

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவேதர்பார் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி இரண்டாவதுமுறையாக இணைய உள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.