ADVERTISEMENT

இளையராஜா இசையில் பல ஆண்டுகள் கழித்து பாடியுள்ள யேசுதாஸ்...

05:04 PM Jun 01, 2019 | santhoshkumar

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ராயல்டி தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடகர் எஸ்.பி.பிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இவ்விரு ஜாம்பாவான்களின் ரசிகர்களுக்கும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த பேச்சு மோதலுக்கு பின்னர் இளையராஜாவும் எஸ்.பி.பியும் வேறு எந்த மேடையிலும் ஒரு சேர கலந்துகொள்ளவில்லை. ஆனால், எஸ்.பி.பி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே இளையராஜாவைப் பற்றி உயர்வாகப் பேசிவந்தார்.

ஜூன் 2ஆம் தேதி இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இது அமையவுள்ளது.பலரும் இந்த நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் , விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது ‘தமிழரசன்’.இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு, பழநிபாரதி, ஜெயராம் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இதில், ‘பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா’ என்ற பாடலை, பாடகர் யேசுதாஸ் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

பழநிபாரதி எழுதியுள்ள ‘வா வா என் மகனே’ என்ற தாலாட்டுப் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார். பல வருடங்களாக இளையராஜா இசையில் பாடாத எஸ்.பி.பி., நீண்ட இடைவெளிக்குப் பாடியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT