ADVERTISEMENT

'நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், கடவுளிடமே திரும்புவோம்' - ஏ.ஆர் ரகுமான்

05:17 PM May 14, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தன் உடல் நலக்குறைவால் சமீபத்தில் காலமானார். அதிபரின் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 74 வயதில் மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் உலகின் இரண்டாவது பணக்கார அரசர் ஆவார். 18 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகப் பதவி வகித்து வந்துள்ளார். இவரது மறைவுக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசு சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதனிடையே ஏ.ஆர் ரகுமான் அவர்கள் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் இரங்கல் பதிவை ரீட்வீட் செய்து, "இந்தியாவில் உள்ள அனைவரின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், கடவுளிடமே திரும்புவோம்...ஷேக் கலீஃபா பின் சயீத்" என ஏ.ஆர் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT