ADVERTISEMENT

"எங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி" - பிரபல இசையமைப்பாளர்கள் பேச்சு

05:41 PM Jan 11, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ட்ரென்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார். படத்தின் பணிகளை முடித்துள்ள படக்குழு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை குறித்து இயக்குநர் ஹரிஹரன் கூறுகையில்," திரைக்கதை எழுதும் போதே இசையுடன் சேர்த்து தான் படத்தையே யோசித்தேன். காதல் படங்கள் என்று வரும்போது, இசையும் காதலும் பிரிக்க முடியாதவை, மேலும் ‘என்ன சொல்ல போகிறாய்’ கதையை ரசிகர்களின் மனதில், இசையின் மூலம் உணர்வுப்பூர்வமாக உயிர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். விவேக் மற்றும் மெர்வின் இசையமைப்பில் இறுதி பதிப்பு மிக அற்புதமாக வந்திருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களும் அவ்வாறே உணர்வார்கள். மேலும் ஒவ்வொருவரும் இந்த இசையை பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் கூறுகையில், "இயக்குநர் ஹரிஹரன் இந்த திரைக்கதையை விவரித்தபோது, என்ன சொல்ல போகிறாய் படம் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் ஒரு அழகான படைப்பாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். எங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கிய ஒரு படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பாடல்களை கேட்பவர்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து பாராட்டும்போது, அதே போல் உணர்வை அவர்கள் பின்னணி இசையிலும் அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.

நேற்று முன்தினம் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் நீதானடி பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்து யூடியூப் தளத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT