Skip to main content

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 'என்ன சொல்ல போகிறாய்'... டீசரை வெளியிட்ட படக்குழு! 

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

ashwin's enna solla pogirai movie teaser released

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக் - மேர்வின் இசையமைக்க, இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது . மேலும் அஸ்வின் முதல் முறையாக நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“50 பேரிலிருந்து தொடங்குறேன்” - விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
pugazh about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். அதனால் இனிமேல் மதியம் நானும் சாப்பாடு போட முடிவெடுத்துள்ளேன். 50 பேரிலிருந்து தொடங்குறேன். பசி என்று யாராவது வந்தால் கே.கே நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் வந்து சாப்பிடலாம். அதற்காக ஆசீர்வாதம் வாங்க தான் இப்போது வந்தேன். கேப்டன் சாருக்காக என்னால் முடிந்தது இதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிக்கவுள்ளேன்” என்றார். 

Next Story

"ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது" -  புகழ்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Comedy actor Pugazh Interview 

 

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஆகஸ்ட் 16, 1947  திரைப்படத்தில் நடித்த நடிகர் புகழ்  உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

1947 படத்தில் மிகச் சிறப்பான ஒரு கேரக்டரை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். பல தரப்பினரிடமிருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல குடும்ப நண்பராக அமைந்தது இறைவன் கொடுத்த வரம். மக்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய பிரதான நோக்கம். ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை ரசிக்கின்றனர். சென்னைக்கு வந்த புதிதில் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறேன். வெல்டிங் கடையில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கிறேன். மக்கள் நம் மீது செலுத்தும் அன்புக்காக எதையும் செய்யலாம். 

 

இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம் வடிவேல் பாலாஜி அண்ணன் தான். இப்போது அவர் நம்மோடு இல்லை என்றாலும், மக்கள் மனதில் எப்போதும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். எனக்குள் அவர் எப்போதும் இருக்கிறார்.

 

சூர்யா சார் மிகவும் அன்பான மனிதர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும் என்கிற ஆலோசனையை எனக்கு அவர் வழங்கினார். மனைவிக்காக வாழ வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரா என்று ஆச்சரியப்பட்டேன். என் நடிப்பின் மீது எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளன. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சரி செய்து கொள்கிறேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம். அதை நான் இறுதி வரை செய்வேன்.