ADVERTISEMENT

ராட்சசன் பட இயக்குநருடன் ஹாட்ரிக் கூட்டணி - விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

05:20 PM Jan 20, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராம்குமார். வித்தியாசமான கதையை காமெடி கலந்து சொல்லி முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து 'ராட்சசன்' படத்தை இயக்கினார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். பிறகு சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், விரைவில் படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் ஏற்கனவே வெளியான இரண்டு படங்களும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதோடு, முதல் படத்தில் காமெடி, அடுத்த படத்தில் சைக்கோ த்ரில்லர் என படத்துக்குப் படம் வித்தியாசமான ஜானரை அணுகும் இக்கூட்டணி, இந்த முறை எந்த ஜானரில் படம் எடுக்கவுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இப்போதிலிருந்தே எழத்தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT