/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/334_8.jpg)
2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராம்குமார். வித்தியாசமான கதையை காமெடி கலந்து சொல்லி முதல் படத்திலே அனைவரின் கவனைத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து 'ராட்சசன்' படத்தை இயக்கினார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். பிறகு சில காரணங்களால் இன்னும் இப்படம் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ராம்குமார், மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து மூன்றாவது முறையாக படம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதோடு, 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' சார்பாக விஷ்ணு விஷால் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக இணைவுள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)