ADVERTISEMENT

அரசாங்கம் மக்களுக்காக தான்... இல்லையேல் 2019 ஆண்டே விழித்துக் கொள் - விஷால் எச்சரிக்கை 

01:28 PM May 23, 2018 | santhosh


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நேற்று நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சுட்டதில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மேலும் 5 பேர் வரை கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு ரஜினி, கமல், உட்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல் தயரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காக தான் போராடுகிறார்கள். மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது. அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல. 2019 ஆண்டே விழித்துக் கொள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT