/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault (1)_5.jpg)
காமெடி நடிகர் சதிஷ் தற்போது காமெடியனாக பல முன்னணி நாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது இவர் வில்லனாகவும் நடித்து வருகிறார். மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து கொண்டிருக்கும் தமிழ் படம் 2ஆம் பாகத்தில் வில்லனாக சதிஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் வில்லனாக நடித்தை குறித்து அவர் பேசும்போது.... "நான் அறிமுகம் ஆனதே தமிழ் படம் பாகம் 1 இல் தான். தமிழ் படம் 2 முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும். இதில் நான் வில்லனாக கதாபாத்திர உயர்வு பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனக்கு 15 கெட்டப்கள். நான் சீரியஸாக பேசும் வசனங்களுக்கு எல்லாம் மக்கள் கைதட்டி சிரித்து ரசிப்பார்கள். எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்" என்றார்.
ஏற்கனவே துணை முதல்வர் பன்னீர்செல்வம் போன்ற தோற்றத்தில் நடிகர் சிவா இருந்த இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல் ஆனது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)