ADVERTISEMENT

விஜய், சூர்யாவிற்காக செய்த கதையில் நடித்த விஷால்... அது எந்த படம் தெரியுமா...? 

10:59 AM Sep 26, 2018 | santhosh

ADVERTISEMENT

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகி வரும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் நடிகர் விஷால் பேசியபோது.... "25 படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி முதல் பாகம் எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் என்ற உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன். அப்போது நான் நடித்த 'செல்லமே' படம் கூட வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்கு தொடங்கியதுதான் என் வாழ்க்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. 'தாவணி போட்ட தீபாவளி' பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள். லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன்.

ADVERTISEMENT

அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது. கீர்த்தி அவர்களுடைய மற்ற படங்களை பார்த்து இருக்கிறேன். அவர்களுடைய மகாநதி பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஒரு எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார். வீட்டில் எங்க அப்பாவை நான் எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன். லிங்குசாமி என்னிடம் கேட்டார் இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமரா மேன் சரியா என்று கேட்டார். உனக்கு யாரை தோனுகிறதோ அவர்களை வைத்துக்கொள் என்றேன். சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. முதல் பாகத்தை விட இதில் இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார். இந்த படத்தை முதலில் என்னிடம் சொன்னது தயாரிப்பாளர் பிரவீன் தான். நான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன். அனால் என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. பிரபு சாருடனோ, ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும், பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். சண்டக்கோழி -2, பந்தையம்கோழி-2 இரண்டுமே அக்டோபர் 18ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று இப்படம் வெளிவரும். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. அனல் அரசு மாஸ்டர் மூலமாக உடலில் 100 தையல் வந்து விட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோல் வைக்கிறேன். தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய, பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்" என்றார்.

வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யவும்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT