ADVERTISEMENT

குரல் கொடுக்க ஆரம்பித்தார் விஜய்சேதுபதி !

11:02 AM Aug 05, 2019 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமான பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் நடைபெற்று முடிவுபெற்ற நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள AVM ஸ்டுடியோவில் சமீபத்தில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய்சேதுபதி தன் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT