ADVERTISEMENT

விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக ஜோடி சேரும் நடிகை... 

03:37 PM Mar 29, 2019 | santhoshkumar

விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே குழப்பான விமர்சனத்தை பெற்றுள்ள படம் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஐரா திரைப்படம். விமர்சனம் மோசமாக இருந்தாலும், படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நண்டிக்கும் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. அதையடுத்து புதிதாக விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் முழு விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'தர்மதுரை' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். தொடர்ச்சியாக 4-வது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT