Skip to main content

அஞ்சு மணி ஷோ... அதிரடி அரசியல்... - விஜய் தேவரகொண்டா என்ட்ரி எப்படி?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

அர்ஜுன் ரெட்டி... தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் பிரபலமான பெயர். கிட்டத்தட்ட எல்லா தமிழ் இளைஞர்களும் பார்த்திருக்கும் தெலுங்கு படம்.

 

vijay arjun



இந்தப் படத்தின் மூலம்தான் விஜய் தேவரகொண்டா தமிழகத்துக்கு அறிமுகம். கட்டுக்கடங்காத தலைமுடி, சுதந்திரத்தை வெளிப்படுத்தும் தாடி என கரடு முரடு ஹீரோவாக கவர்ந்தவர் விஜய். அந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ராயல் என்ஃபீல்டு பைக், உடை, கூலர்ஸ் என அனைத்தும் தெலுங்கு தேசத்தைத் தாண்டி தென்னிந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆனது. இதற்கு முன் 'ப்ரேமம்' படத்தின் மூலமாக நிவின் பாலிக்கு அந்தப் புகழ் கிடைத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் வேறு திசையில் சென்றுவிட்டன.

 

vijay in theatre

5 மணி காட்சி



அர்ஜுன் ரெட்டி மயக்கம் தெளியும் முன்பே வந்தது 'கீதா கோவிந்தம்'. ரக்கட் (rugged) டாக்டராக இருந்து ஹேண்ட்ஸம் ப்ரொஃபசர் ஆனார் விஜய். 'மேடம், மேடம்' என்று அவர் கெஞ்சியதில் தமிழக இளம் பெண்களும் மனதிறங்கிவிட்டனர். நேரடி தெலுங்கு படமான 'கீதா கோவிந்தம்' சென்னையில் பல வாரங்கள் பலத்த போட்டிகளைத் தாண்டி ஓடியது மிகப்பெரிய வெற்றி. சென்னையைத் தாண்டி பல ஊர்களிலும் திரையரங்குகளில் வெளியானது அதை விட பெரிய வெற்றி.  சோஷியல் மீடியாவில் வெளிப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா ரசிகைகள், இன்று காலை சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்த அதிகாலை 5 மணி காட்சியில் கூடியது பெரிய ஆச்சரியம். கீதா கோவிந்தம் படத்துக்கு காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.

'இன்கேம் இன்கேம்' என்ற அந்த ஒரு பாடலும் அதில் நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியும் போதுமானதாக இருந்தது அந்தப் படத்திற்குக் கூட்டத்தை இழுக்க. அந்தப் படத்தின் வெற்றி இப்போது நேரடியாக விஜய் நடிக்கும் முதல் தமிழ் படமான 'நோட்டா'வுக்கு காலை 5 மணி காட்சியை பெற்றுத் தந்துள்ளது. ஆரம்பத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் நால்வருக்கு மட்டுமே இந்த அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர் சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு இது வாய்த்தது. அவர்கள் அனைவருக்கும் பல படங்கள் வெற்றி பெற்ற பின் கிடைத்த இந்த வாய்ப்பு, விஜய் தேவரகொண்டாவுக்கு முதல் நேரடி தமிழ் படத்திலேயே கிடைத்துள்ளது. அவர் அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளர்க்கிறார். சென்னையில் நடந்த 5 மணி காட்சிக்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார் விஜய் தேவரகொண்டா. படத்தின் பிரமோஷனுக்காக பல விதங்களில் நேர்காணல்கள் கொடுத்தார். 


 

nota vijay

நோட்டா

 

இவை படத்துக்கு வெளியே என்றால் 'நோட்டா' படத்தில் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கி கொண்டாட்டமாக இருந்ததில் இருந்து, சென்னை வெள்ளத்தின் போது அரசு நடந்து கொண்ட விதம் வரை தமிழக அரசை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகளை வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் மாநில அரசியல்வாதிகளை நேரடியாக பலமாக விமர்சித்த படம் 'ஜோக்கர்' என்றே சொல்லலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் மாநில அரசை நேரடியாக விமர்சிக்கும், கிண்டல் செய்யும் தன்மை குறைவு. 'மெர்சல்' படத்தில் விஜய் அரசியல் பேசியிருந்தாலும் அது மேலோட்டமானதாக, பொதுவானதாக இருந்தது. அந்த வகையில், விஜய் தேவரகொண்டா கொஞ்சம் தைரியமாகத்தான் செய்துள்ளார். தன் பேட்டிகளிலும் அதிமுக அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் மரியாதைகளை கிண்டல் செய்து பேசியுள்ளார் விஜய். இப்படி, படத்தின் உள்ளடக்கத்திலும் படத்துக்கு கிடைத்த ஓப்பனிங்கிலும் விஜய் தேவரகொண்டாவின் என்ட்ரி அதிரடியாகத்தான் அமைந்துள்ளது.

 

 

                                          

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்காத 'ஜவான்' - டிரைலர் வெளியீடு!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் இந்தாண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், அண்மையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

Next Story

“சொந்த வசனத்தை சேர்த்துக்கொள்ள இந்த இயக்குநர் அனுமதிப்பார்” - அனுபவம் பகிரும் பக்ஸ்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Bagavathi Perumal  interview

 

பல படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பினால் நம்மை ஈர்த்த நடிகர் பக்ஸ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக நாங்கள் பல மாதங்கள் ரிகர்சல் செய்தோம். அதனால் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் பலமுறை நடித்துப் பார்த்தோம். படத்தில் எப்போதும் நாங்கள் விஜய் சேதுபதியோடு இருப்பது போன்று எங்களது கேரக்டர்கள் அமைந்தன. அந்தப் படத்தின் கதை பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றது. ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். என்னுடைய நடிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெகுவாகப் பாராட்டினார். 96 படமும் சிறந்த ஒரு அனுபவம். இயக்குநர் பிரேம் நல்ல நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்.

 

நானும் விஜய் சேதுபதியும் ரொம்ப க்ளோஸ் நண்பர்கள் என்று பலர் நினைக்கின்றனர். நாங்கள் நல்ல நண்பர்கள் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஃபோனில் பேசுவதே பெரிய விஷயம். 96 படத்தில் என்னுடைய நடிப்பை அவர் மிகவும் பாராட்டினார். அவ்வப்போது பேசினாலும் சிறந்த ஒரு நண்பர் அவர். தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வாய்ப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு கிடைத்தது. அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒரே படத்தில் எனக்கு நிறைவேறியது.

 

ஃபகத் பாசில் சிறந்த ஒரு நடிகர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரோடு நடித்தது அருமையான அனுபவம். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னுடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். சில சொந்த வசனங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பார். படத்தை மெருகேற்றுவதே அவருடைய நோக்கம். அதனால் அந்த படப்பிடிப்பு மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.