ADVERTISEMENT

பெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம் 

05:28 PM Apr 18, 2018 | santhosh


ஸ்டண்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியனில் நேற்று சிறப்பாக கொண்டாப்பட்டது. விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் சேதுபதி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேக் வெட்டி விழாவை ஆரம்பித்த விஜய் சேதுபதி பின்னர் ரத்ததானம் செய்துவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆசிப்பவை பற்றி பேசுகையில்...."பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும்போது பயங்கர கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்க தனியாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது. எப்படி பாடம் எடுக்கிறது என்று தெரிய வில்லை. நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த ஜாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். இதிலிருந்து நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பத்தாது. ஆனால், தண்டனை கிடைக்கனும். இதை சப்போர்ட் பண்றவர்களை பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது" என மனம் வருந்தி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT