ADVERTISEMENT

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் சேதுபதி

05:32 PM Apr 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் தள்ளிப்போனது.சமீபத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து மே 20 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி 20 ஆம் தேதியில் இருந்து ஜூன் 24 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மே 20 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாக இருப்பதால் அதே நாளில் வெளியாகவிருந்த 'மாமனிதன்' படம் தள்ளிப்போனதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மாமனிதன் இயக்குநர் சீனு ராமசாமி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சென்று சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இழுபறிக்கு மத்தியில் 'மாமனிதன்' படம் மே 20 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT