ADVERTISEMENT

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் பட பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!

06:39 PM Jan 25, 2019 | santhosh

ADVERTISEMENT

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கண்ணம்மா' 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது, சாம் சிஎஸ்ஸின் இசையில், விஜய் சேதுபதியின் குரலில் 'ஏய் கடவுளே' என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.மேலும் இந்த பாடல் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது...."கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

ADVERTISEMENT

இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, 'ஏய் கடவுளே' அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT