ADVERTISEMENT

'சீரியல் கில்லர்... சிங்கம்...' - குட்டிக் கதை சொன்ன விஜய்

06:15 PM Oct 05, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டிருந்து பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், ஒரு சீரியல் கில்லருக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் என ஒரு கதையை விவரிக்கிறார் விஜய். பின்பு அந்த சீரியல் கில்லர் கூட்டத்தின் மேல் கை வைக்கிறார் விஜய். அதன் பிறகு அந்த கூட்டத்தால் விஜய் குடும்பத்திற்கு ஏகப்பட்ட பாதிப்பு வருகிறது. அதனால் அவரை வேறொரு இடத்தில் மறைந்து வாழ அறிவுறுத்துகின்றனர். பின்பு அந்த கூட்டத்தை விஜய் ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கினாரா இல்லையா என்பதை ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கியிருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT