leo movie crew in kashmir

'வாரிசு' படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை அவரது ட்விட்டர்பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். அதில் விஜய், கௌதம் மேனன்உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் குளிருக்குஇதமாகத்தீ மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இப்புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்த திரிஷா சென்னைக்கு வந்தார். இதனால் அவர் விலகிவிட்டதாக வதந்திகள் பரவ அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மீண்டும் காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்