ADVERTISEMENT

விஜய் தேவராகொண்டா வெளியிட்ட போஸ்டர்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

06:05 PM Jul 02, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நிர்வாணமாக கையில் பூங்கொத்துடன் தோன்றியுள்ளார். மேலும் அந்த பதிவில், "இந்த படம் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. எனக்கு நடிப்பிலும், மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சவாலான படம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன். விரைவில் வருகிறது, லைகர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் பலரிடம் வரவேற்பை பெற்றாலும் சிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடலாமா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT