/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/437_3.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லைகர்'. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் மும்பையில் உள்ள குடிசை பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் மக்களோடு சிறிய நடனம் ஆடியுள்ளனர். 'லைகர்' படத்தின் கதை படி குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டையில் இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை கூறுவது போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள ஒரு லோக்கல் இரயிலில் இருவரும் பயணித்து படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனிடையே 'லைகர்' படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)