ADVERTISEMENT

“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்

03:29 PM Mar 24, 2019 | santhoshkumar

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அப்போது ராதாரவி பேசியது: “ எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள். நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைதான் தேடுவார்கள். அவரை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று ராதாரவி பேசியுள்ளார். இதனால் ராதாரவியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் பெண் நடிகைகளை குறித்து சர்ச்சை ரீதியாக பேசியுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பின்னர் பலர் ராதாரவிக்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்ய, நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

“ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்டின் வாயிலிருந்து வந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டனக் குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று எனக்கு எந்த ஆதரவுமில்லை. தன் மீது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்ததும், கைதட்டியதும் கவலையளித்தது. இப்படி ஒரு நிகழ்ச்சி முடிவடையாத ஒரு படத்திற்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசினர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நல்லது.ஏனெனில் இத்தகைய நிகழ்ச்சிகள் வேலையற்ற நபர்களுக்கு தங்கள் அறிவற்ற கருத்துகளைச் சொல்ல இடமளிக்கிறது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை” என்று விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT