ADVERTISEMENT

“சார்பட்டா பரம்பரை பார்த்துதான் காப்பியடித்தேன்” - 'மாநாடு' ரகசியத்தை உடைத்த வெங்கட் பிரபு  

06:30 PM Aug 23, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா. ரஞ்சித், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரி போர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே ரஞ்சித்தை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சரியம் தரும். நட்சத்திரம் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். ரஞ்சித் மிரட்டிட்டாரு. நிறைய பேர் சொன்னாங்க இந்த படம் பிரெஞ்ச் படம் மாதிரி இருக்குன்னு, கண்டிப்பா இந்த படம் உலகத்தரம் வாய்ந்த படமாகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சார்பட்டா பரம்பரை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் துஷார, மற்றும் ஆர்யாவின் அம்மா பேசும் காட்சிகள் விஷுவலாக இல்லாமல் ஆடியோவாக காட்டியிருப்பார்கள். அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அந்த காட்சி போன்று காட்சியை மாநாடு க்ளைமாக்ஸில் வைத்தேன். உங்களை பார்த்து காப்பியடித்துதான் அந்த காட்சி வைக்கப்பட்டது" என்றார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை 28 படத்தில் பா.ரஞ்சித் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT