ADVERTISEMENT

திரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்!

02:45 PM Apr 10, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் படம் 'மாவீரன் பிள்ளை'. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார். பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், இப்படம் குறித்து பேசுகையில்....

"தற்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பற்றிய படம் என்பதால், நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன்வந்தேன்" என்றார்.

இவர்களுடன் ராதாரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி, பாடியுள்ளார் ஆலயமணி. இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT