Skip to main content

“21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்றுதான் பெயர்; சிறைக் கொடுமை சாதாரணமானதல்ல” - வழக்கறிஞர் ப.பா. மோகன் பேச்சு

Published on 17/11/2022 | Edited on 18/11/2022

 

'We are living in the 21st century, so prison cruelty is not normal' - lawyer PA Mohan said

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு மாவட்டக் குழு சார்பில்  எம்.கல்யாணசுந்தரம் இல்லத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இக்கூட்டத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்புடைய வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுக் கடந்த 28.11.1997 ஆம் ஆண்டு ஈரோடு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாதையன், ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் வீரப்பன் சகோதரர் மாதையன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சிறையில் மரணம் அடைந்துவிட்டார். தற்போது தமிழக அரசு பிற ஆயுள் சிறைவாசிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை விடுதலை செய்துள்ளது. மேற்படி இரண்டு பேரும் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து முடித்துள்ளனர். இந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தின் நோக்கமாகத் தமிழக சிறையில் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஆயுள் சிறைவாசிகள் வாடுகின்றனர். அவர்களையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முன் வரவேண்டும். ஆயுள் சிறைவாசியின் முன் விடுதலை என்பது சிறைவாசிகள் தங்கள் தண்டனை முடித்துத் திரும்பவும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல் வாய்ப்புக்கான மனிதாபிமான செயலாகும். இந்த உரிமை மாநில அரசு அதிகாரம். மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போடுவது அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டுதல் படி தவறானது. தமிழக ஆளுநர் 187 மாநில அரசின் முன் விடுதலை பரிந்துரையை நிராகரித்துள்ளது தவறானது. அது விருப்பு வெறுப்பு சார்ந்தது இந்தப் போக்கு. அரசியலமைப்பு நடைமுறையை முட்டுக்கட்டை போட்டுவிட்டுச் செல்லும் எனக் கவலைப்படுவதாக விவாதிக்கப்பட்டது.

 

nn

 

அதில் வழக்கறிஞர் ப.பா.மோகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வி.பி.குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன் ''சிறை என்பது ஒருவரைத் திருத்துவதற்காகத்தான் இருக்கிறதே தவிர அவரைத் தண்டித்து அங்கேயே சாகடிப்பதற்காக இல்லை. சுதந்திர இந்தியாவில் அவர்களும் மனிதர்கள்தான். சிறைவாசிகளுக்கு மனித உரிமை உண்டு. ஒருவர் 14 ஆண்டுகள் இருந்தாலே அவருடைய நடத்தை, சமூகத்தில் வாழ்வதற்குத் தன்னை திருத்திக் கொண்டுள்ளார்களா என்று பார்க்கச் சொல்கிறார்கள். அவை இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்காகத் தனியாக குழு அமைத்து விடுவிப்பதற்காகச் சட்டத் திருத்தம் 433 ஏ கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஆளுகின்றவர்கள் என்றைக்குமே கட்சிக்காகச் சாதகமாக்காமல் இருக்க வேண்டும்.

 

லீலாவதி கொலை வழக்கில் ஏழு வருடத்தில் வெளியே வந்தார்கள். கோவை மாணவிகள் வழக்கில் கொடூரமாக பஸ் எரித்துக் கொன்றவர்கள் வெளியே வந்தார்கள். ஆனால் ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள், உழைக்கின்ற மக்கள் இவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றபோது? ஆனால் அவர்களுக்கு இது பற்றித் தெரியாது. ஆனால் ஆளுங்கட்சிக்காரர்கள், ஆதிக்க மக்களுக்கு இது இருக்கிறது என்று தெரிகிறது என்பதை வருத்தத்துடன் நாங்கள் குறிப்பிடுகிறோம். இதைச் செய்திருக்கின்ற அரசை நாங்கள் பாராட்டுகிறது ஒரு பக்கம் அதே சமயத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் 20 பேர் எந்த விதமான  குற்றமும் கிடையாது 20 பேர் இன்றைக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கிடக்கிறார்கள். குடும்பமே நசுங்கிப் போய் இருக்கிறது. 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்கிறோமே தவிர சிறையில் நடக்கக்கூடிய கொடுமைகள் சாதாரணமானது அல்ல. இதுபோன்ற சிறைவாசிகளுக்கும் சமுதாயத்தில் வாழ்க்கை உண்டு'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவுத் தூண்! - திறந்து வைத்த ஆளும்கட்சி வேட்பாளர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.

Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.