ADVERTISEMENT

'வீரமே வாகை சூடும்' செகண்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஷால்!

12:59 PM Sep 11, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. இந்தப் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT