/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_361.jpg)
'அரிமா நம்பி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. இதையடுத்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘எனிமி’ திரைப்படம் ஆயுத பூஜை தினமான வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)