ADVERTISEMENT

"வாதிட்டு இடம்பெறச் செய்தேன்" - ரஜினி பாடல் குறித்து அனுபவம் பகிர்ந்த வைரமுத்து

01:17 PM Sep 23, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடலாசிரியர் வைரமுத்து, அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும், தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகள் மற்றும் திரை அனுபவங்களையும் அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம் பெற்ற 'ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை...' என்ற பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "ரஜினிகாந்துக்கு நான் எழுதிய ஒரு பாடல். படத்தின் வேகத்தைக் குறைக்கிறதென்றும் நீக்கப்பட வேண்டுமென்றும் ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்தது. ஒரு கலைச்சோகம் என்னைச் சூழ்ந்தது. போதைக்கு எதிரான அந்தப் பாடல் சமூக அக்கறைக்காக விருது பெறும் என்று வாதிட்டு இடம்பெறச் செய்தேன். படம் வெளியானது. கிறித்துவப் பாதிரிமார்கள் அந்தப் பாடலைக் கொண்டாடி லயோலாக் கல்லூரியில் விருதளித்துப் பாராட்டினார்கள். என்னைத் தவிரப் பலரும் சென்று விருது பெற்றார்கள். அந்தப் பாட்டு இன்று காலத்தின் தேவையாகிவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான், தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT