/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_37.jpg)
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவில் ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படப்பிடிப்பும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு இடைவெளியின் போது இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் ஷாருக்கானும் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஜவான்' படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)