ADVERTISEMENT

'இன்னும் அர்த்தம் புரியாமல் புகார் வருகிறது' - பிரபல பாடல் வரிகளுக்கு விளக்கமளித்த வைரமுத்து

12:37 PM Sep 16, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாரதிராஜா இயக்கத்தில் மறைந்த நடிகர் பாண்டியன், ரேவதி உள்ளிட்ட பலர் நடிப்பில் 1983ஆம் ஆண்டு வெளியான படம் 'மண்வாசனை'. சித்ரா லக்ஷ்மணன் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 'பொத்திவச்ச மல்லிகை மொட்டு...' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. இடையில் வீடியோ மீம்ஸ்களுக்கு விருந்தாக இருந்தது. மேலும் பல்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி வைரமுத்து, அவர் எழுதிய பாடல் குறித்து அவரது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " 'ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்...வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்” என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது.

'என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது. அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்" என்பது விளக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது. வெட்கப்பட ஆளுமில்லை. மஞ்சளுக்கும் வேலையில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT