ADVERTISEMENT

"ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட படம்" - ரஜினி படத்தை கொண்டாடும் வைரமுத்து

04:22 PM Jun 15, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிவாஜி'. 'ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலாக வசூலித்து திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என பக்காவான மாஸ் கார்ஷியல் படமாக வெளிவந்த இப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் வைரமுத்து, 'சிவாஜி' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " ஏவி.எம் நிறுவனத்தின் பெரும் படைப்புகளுள் ஒன்று ஷங்கர் இயக்க ரஜினி நடித்த சிவாஜி. 15ஆண்டுகளுக்குப் பிறகும் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது. ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட படம். வாஜி வாஜி கேட்கும்போதே சஹானா சாரல் தூவுகிறது. வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். வைரமுத்து, 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள 'வாஜி வாஜி' மற்றும் 'சஹானா' பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் 'சிவாஜி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT