ADVERTISEMENT

“உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது” - வைரமுத்து

12:37 PM Feb 21, 2024 | kavidhasan@nak…

உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும் உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் ஆர்வலர்கள் பலரும் அது தொடர்பாக சமுக வலைதளங்களில் வாழ்த்து பதிவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, அவரது எக்ஸ் பக்கத்தில், “வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன். தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும் உயிரோடும் உடலோடும் கலந்தவை. தாய்நாடு தாய்ப்பால் தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்.

ADVERTISEMENT

ஆனால், உலகமயம் தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன. உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது. அரசு, ஆசிரியர், பெற்றோர் மாணவர், ஊடகம் என்ற ஐம்பெரும் கூட்டணிகளால் மட்டுமே இந்தப் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுக்கமுடியும். சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும். எங்கள் தாய்மொழி, எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT