ADVERTISEMENT

‘மாஸ்டர்’ பாடல் தொட்ட மைல்கல்!

11:34 AM Apr 28, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே அனிருத் இசையில் உருவான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘மாஸ்டர்’ பாடல்களின் உரிமையைக் கைவசம் வைத்துள்ள சோனி நிறுவனம், பட வெளியீட்டிற்குப் பின் ஒவ்வொரு பாடலாக யூ-டியூப் தளத்தில் பதிவேற்றி வந்தது. அந்த வகையில், ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடல் தற்போது உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி 3 மாதங்களிலேயே 150 மில்லியன் என்ற மைல்கல்லை ‘வாத்தி கம்மிங்’ பாடல் தொட்டது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT