ADVERTISEMENT

''இனியும் நாம் அமைதி காக்க கூடாது!'' - த்ரிஷா ஆவேசம்! 

03:26 PM Aug 28, 2019 | santhosh

திரைப்பட நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவருமான நடிகை த்ரிஷா குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் இன்று யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியபோது....

ADVERTISEMENT


''தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000, 2015ல் இது 15000 வழக்குகளாக இருந்து 2016ல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது. குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள், நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றன. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT


சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும். குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT