96 படத்தின் மெகா வெற்றிக்காக இயக்குனர் ப்ரேம் குமாருக்கு ஒரு புது புல்லட்டை பரிசளித்துள்ளார் விஜய் சேதுபதி. அந்த எண்ணம் உருவான கதையையும், 96 படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் கட்டியணைத்துக் கொண்டது, தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போது 96 படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, 96 படத்தை தெலுங்கில் எடுப்பது என பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ப்ரேம்குமார்.