ADVERTISEMENT

ரத்தம் தெறிக்கும் போஸ்டர் - தளபதி 67 புது அப்டேட்

06:13 PM Feb 02, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. இது விக்ரம் பட பாணியில் டைட்டில் டீசராக இருக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT