ADVERTISEMENT

'தலைவி' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

05:54 PM Mar 19, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தலைவி படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி, திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தலைவி படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவி படத்தின் ட்ரைலர் மார்ச் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரணாவத், மார்ச் 23-ஆம் தேதியன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, படத்தின் ட்ரைலரை அன்றைய தினம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT