/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jpg_17.jpg)
இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துவருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையே கரோனா 2வது அலை நாடு முழுவதும் பரவிவருவதால் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால், 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை கங்கனா வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும். அதனால்தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என வருத்தமாகப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)