ADVERTISEMENT

ஓ.டி.டியில்  வெளியாகும் கிறிஸ்டஃபர் நோலனின் 'டெனட்' 

11:23 AM Nov 07, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

'டன்கிரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

கரோனா தோற்றால் பலமுறை வெளியிட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியானது. 500 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், இதுவரை 350 மில்லியன் டாலர் வரை வசூலித்துள்ளது. இதனால் படம் சரியாக ஓடவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில் இதற்கு விளக்கமளித்த கிறிஸ்டஃபர் நோலன், "கரோனா காலத்திற்கு முன்பு உள்ள நிலையுடன் ஒப்பிட்டு டெனட் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் வசூல் என மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இந்த நிலையில் டெனட் திரைப்படம், வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியாகும் என படத்தின் டெனட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டெனட் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாததால், இங்கு ஒ.டி.டியில் வெளியாகுமா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT