ADVERTISEMENT

ரிலீஸுக்கு புது யுக்திகளை கையாளும் டெனட் படக்குழு! 

02:19 PM Jul 28, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

'டன்க்ரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தின் கரு “டைம் இன்வர்ஸ்” என்ற அறிவியல் தியரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா தொற்று காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் புது சினிமாக்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த மூன்று மாதங்களில் வெளியிடுவதாக சொல்லப்பட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளன. ஆனால், 'டெனட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமலே இருந்தது. இதனால் படம் ஜூலை மாதத்தில் முன்பு அறிவிக்கப்பட்ட அதே ரிலீஸ் தேதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பல நாடுகளில் கரோனா அச்சுறுத்தல் முடிவு பெறாததால் மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில் புது, புது யுக்திகளின் மூலம் ரிலீஸ் செய்ய வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ‘டெனெட்’ வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் செப்டம்பர் 3 அன்று ‘டெனெட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. சீனாவில் படம் வெளியாவது குறித்து எந்த அறிவிப்பையும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT