/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_102.jpg)
பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான டெனட் திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படம் என்பதால் முதல் இருநாள் காட்சிகளுக்கு ரசிகர்கள் கூட்டத்தால் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில், இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளரான நிரவ் ஷா பணியாற்றியுள்ளார்.
டெனட் படத்தில் இந்தியா சம்பத்தப்பட்ட காட்சிகள் இருந்ததால், அந்தக் காட்சிகளில் மட்டும் அவர் கூடுதல் கேமரா இயக்குனராகச் செயல்பட்டுள்ளார். படத்தின் இறுதியில் திரையில் அவரது பெயரைப் பார்த்த இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள். குறிப்பாக அஜித் ரசிகர்கள் இதனை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கான காரணம், போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார் என்பதே ஆகும். நீண்ட காலமாக வலிமை அப்டேட்டிற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் அஜித் நடித்த பில்லா மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் இவரது ஒளிப்பதிவு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தநிலையில், மீண்டும் அமைந்துள்ள இந்தக் கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)