ADVERTISEMENT

துணிந்த 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி... பணிந்த நடிகர் சங்கம்... மிரண்ட தெலுங்கு பட உலகம் !

11:59 AM Apr 16, 2018 | santhosh


தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கூறி திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. பின்னர் பிரபல தயரிப்பாளரின் மகன் உட்பட பல பிரபலங்கள் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, வாட்ஸாப் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த 'ஸ்ரீலீக்ஸ்' விவகாரம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஸ்ரீரெட்டிக்கு மகளிர் அமைப்புகளும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், அவருக்கு நடிக்க வாய்ப்பு அளிக்காமல் தடுப்பதும் தனி மனிதனின் உரிமையை பறிப்பதாகும். இந்த விவகாரத்தில் நான்கு வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் திடீரென்று நீக்கியுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் சங்கத்தில் உள்ள 900 ஆயிரம் உறுப்பினர்களும் ஸ்ரீரெட்டியுடன் நடிக்கலாம் என்றும் நடிகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும், மேலும் இந்த குழுவில் 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT