ADVERTISEMENT

"புலி வருது... புலி வருதுனு சொன்னாங்க... ஆனா" - ரஜினியின் அரசியல் வருகையும், சினிமா பிரபலங்களின் ரியாக்ஷனும்!

06:19 PM Dec 03, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சினிமாத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை வரவேற்றும், அவரை வாழ்த்தியும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத், "இனிதான் ஆரம்பம், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என 'பாபா' முத்திரையோடு" தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ரஜினியை வைத்து, 'பேட்ட' படத்தை இயக்கிவருபவரும், ரஜினியின் தீவிர ரசிகருமான கார்த்திக் சுப்புராஜ், "வாவ் தலைவா... வா தலைவா!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ரஜினியின் கட்சித் தொடங்கும் அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகரும் - நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், "இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற, நான் ராகவேந்திரா சாமியை வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கடினமான கரோனா காலத்திலும், உங்கள் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்துள்ளீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நிறைவேறும்" எனக் கூறியுள்ளார்.


இயக்குனர் லிங்குசாமி, "புலி வருது... புலி வருதுனு சொன்னாங்க. ஆனா, இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துகள் சார்" என ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம், "ரஜினி தனது அரசியல் பயணத்திலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்" எனக் கூறியுள்ளது.


பின்னணி பாடகர் க்ரிஷ், "வாருங்கள் தலைவா, வாருங்கள்... மாற்றத்திற்கான நேரம்" என ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT