ADVERTISEMENT

சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்காவில் திரையிட தேர்வான ஒரே இந்திய திரைப்படம்

05:07 PM Sep 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் பிராங்க் புகழ் ஆர்.ஜே. சரித்திரன் நடிப்பில் வெளியான குறும்படம் 'ஸ்வீட் பிரியாணி'. உணவு டெலிவரி பாயின் ஒருநாளை அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் பேசியிருந்த 'ஸ்வீட் பிரியாணி' குறும்படத்தில், சென்னை பெருநகரத்தில் படிந்துள்ள சாதிய ஆதிக்க மனநிலையையும் இயக்குநர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்தக் குறும்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்தில் நடைபெறும் 20 வது ஓக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஸ்வீட் பிரியாணி தேர்வாகியுள்ளது. செப்டம்பர் 15 முதல் 24 வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவின் முதல் நாளான நாளை, புகழ்பெற்ற தி கிராண்ட் லேக் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் முறையாக இவ்விழாவில் திரையிட தேர்வாகியுள்ள ஒரே படம் ஸ்வீட் பிரியாணி என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT