ADVERTISEMENT

மோதிக்கொள்ளும் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள்!

05:12 PM Aug 19, 2019 | santhoshkumar

இந்திய சினிமா வரலாற்றில் நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்கும் பண்டிகைகளில் படங்களை வெளியிடதான் விரும்புவார்கள். ஏனெனில் படம் வெளியானவுடன் விடுமுறையிலுள்ள குடும்பங்கள் வந்து படத்தை பார்ப்பார்கள். இதனால் நல்ல வசூலும் கிடைக்கும் என்கிற முனைப்புதான். அந்த பண்டிகைகளில் பொங்கல், தீபாவளி விடுமுறைகள் சினிமா ரிலீஸில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வரிசையில் கிறிஸ்துமஸ் விடுமுறையும் நீண்ட விடுமுறையை கொண்டதுதான். அந்த நேரத்தில் அரையாண்டு விடுமுறையினால் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வருடம் அந்த விடுமுறையை டார்கெட் செய்து சுமார் ஏழு படங்கள் வெளியானது. சீதக்காதி, கனா, மாரி-2 உள்ளிட்ட ஏழு படங்கள் வெளியாகின. இந்த முறை இந்த விடுமுறையை இரு உட்ச நட்சத்திரங்கள் டார்கெட் செய்துள்ளனர். சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளது.

இதில் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்பதை டைட்டில் டிசைன் வெளியிட்டுலேயே அறிவித்துவிட்டது. ஆனால், சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சினிமா வட்டாரங்களில் இவ்விரு படங்கள்தான் கிறிஸ்துமஸை குறி வைத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT